Sidhariyal

முன்னோர்கள் வகுத்த 40 வகை மழைகள் அறிவீர்களா??? (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 4, 2026

#மழைகளின்வகைகள் 1. ஊசித் தூற்றல் 2. சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை) 3. சாரல் 4. தூறல் 5. பூந்தூறல் 6. பொசும்பல் 7. எறிதூறல் (பொடிக் கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்) 8. தூவானம் 9. பொடித்தூறல் 10. ரவைத்தூறல் 11. எறசல் 12. பறவல்மழை 13. பருவட்டு மழை (மேலெழுந்த காற்றோடு) 14. அரண்ட பருவம் (தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழை) 15. உழவுமழை 16. துணைமழை (முதல் மழையைத் தொடர்ந்து மறுநாளோ அதுக்கும் மறுநாளோ பெய்வது) 17. பேய் மழை 18. நச்சு மழை (இடையில்லாமல் தொடர்ந்து பெய்துகொண்டேயிருப்பது) 19. வதி மழை (பூமியெல்லாம் சேறு ஆகும்படியாக) 20. கல் மழை (ஆலங்கட்டி மழை) 21. காத்து மழை (காற்றும் மழையூம் கலந்து பெய்வது) 22. சேலை நனைகிறாப்புல 23. கோடை மழை 24. கால மழை 25. தக்காலம் (மழைக்காலம்) 26. பாட்டம் பாட்டமாய் (விட்டுத் தொடர்ந்து) 27. நீரூத்து மழை (தரையிலிருந்து நீர்கசிந்து வெளியேறிக் கொண்டேயிருக்கும் படியாகப் பெய்யூம் தொடர் மழை) 28. வெக்கை மழை (சூட்டைக் கிளப்பி விடும்படியான இது பூமியைச் சாந்தி பண்ணமுடியாத மழை) 29. அட மழை (அடை மழை) 30. மாசி மழை ( விவசாயிகளுக்கு உகந்த மழை) 31. தை மழை (வேண்டாத மழை) 32. சுழி மழை ( பரவலாகப் பெய்யாமல் ஆங்காங்கே சுழி சுழியாகப் பெய்யும் மழை) 33. பட்டத்து மழை (விதைக்கும் காலத்தில் பெய்யும் மழை) 34. எல்லைக் கட்டிப் பெய்யும் மழை ( ஊரின் எல்லையோடு பெய்து நின்றுவிடும்) 35. மகுளிக்கும் மழை (பூமி உள்வாங்கிக் கொண்டது போக மண் நீரை வெளியே கக்கும் மழை) 36. வெள்ள மழை 37. பெருமழை (கன மழை) 38. பருவ மழை 39. பதமழை (விதைப்புக்கான ஈரமுள்ள மழை) 40. உப்பு மழை (மதியத்துக்கு மேல் வீசும் உப்பங்காத்து காலையிலேயே வீச ஆரம்பித்தால் அன்றைக்கு நிச்சயம் மழை உண்டு என்பது)..
Related Posts