Sidhariyal

கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

கர்ப்போட்ட காலத்தில் தொடுவானங்களை குறிக்கக் கூடாது. நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் என்ன மேகம் வருகிறது. கொடிமரத்தில் கட்டிய கொடியில் காற்று எத்திசையிலிருந்து எந்த திசைபை நோக்கி அடிக்கிறது என கவனித்து அதை குறிக்க வேண்டும். தலைக்கு மேல் உள்ள வானத்தில் முதல் 102 நிமிடங்களை கவனித்து வகைப்படுத்த வேண்டும். அதில் 1. வானம் தெளிவாக இருக்கிறது. 2. லேசான வெண்மேகம் (குருவி மாசி) 3. அடர்த்தியான வெண்மேகம் (கும்பமாசி) 4. கருமேகம் 5. அடர்த்தியான கருமேகம். 6. சாரல் 7 – தூரல் 8. மிதமான மழை 9. ஒரு உழவு மழை. 10. கண மழை. 11. மிக கனமழை. இப்படி தலைக்கு மேல் இருக்கும் மாற்றங்களை Note – book-ல் எழுதி வைத்து அதன் காலங்களில் கவனிக்க வேண்டும்.
Related Posts