Sidhariyal

March 4, 2026 இன்று பங்குனி உத்திரம், வரும் march – 21 – சமநாள் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on மார்ச் 5, 2026

இன்று march – 04 – 2026 . பங்குனி – 14 – 5127 புதன்கிழமை. பங்குனி உத்திரம். மதியம் வெயிலில் வெளியே தலைகாட்ட முடியவில்லை. வரும் march – 20 – சமநாள். அன்று கொடி மரத்தின் நிழழின் முனையை பகல் முழுதும் குறித்தால் அது ஒரு நேர் கோடாக இருக்கும். மற்ற நாட்கள் அந்த நிழல் வளைந்து இருக்கும். ஏனெனில் அன்று சூரியன் நிலநடுக் கோட்டில் பயணம் செய்யும் நாள். நம் தமிழ் நாட்காட்டி மற்ற சூரிய நாட்காட்டி (solor Calender) போல அல்ல. இந்த 60 வருடங்களுக்கு மட்டும் .தான் சித்திரை -1 – March – 21 -ல் இருக்கும். அடுத்த 2080 – ல் சித்திரை – 1 சமநாளில் இருந்து இரண்டு நாட்கள் தள்ள வேண்டும். அதாவது சமநாள் mardi – 20 சித்திரை -1 march-22-ல் வைப்போம். இந்த 60 சுழல் ஆண்டுகளின் பயனே இதுதான். சூரியனின் 1 திகிரி நகர்வு 60 ஆண்டுகளில் எதிர் திசையில் இருக்கும். அதாவது பூமி சூரியனை 60 முறை சுற்றி வந்தால் சூரியன் ஒரு திகிரி நகர்ந்து இருக்கும். அடுத்த 2140-ல் சித்திரை -1 march – 23-ல் நகர்த்த வேண்டும். இப்படி நகர்ந்து வந்தது தான் ஏப்ரல் – 14 -ல் உள்ள சித்திரை-1 . 420 வருசங்களுக்கு முன்பு சித்திரை – 1 ஏப்ரல் – 14-ல் இருந்துள்ளது. அதற்குப் பின்பு அந்த 60 சுழல் ஆண்டுக் கணக்கை கோயில் உள் நுழைந்தவர்களால், புரிந்து கொள்ள முடியாமல், அந்த 60 சுழல் ஆண்டுக் கணக்கை கை விட்டு விட்டனர். அதனைத் தான் திரைப்படங்களில் பழைய பஞ்சாங்கம் என சொல்லி எள்ளி நகை ஆடுவார்கள். அது உண்மைதான். நம் சித்தரியல் நாட்காட்டியை 420 ஆண்டுகளில் ஏழ 60 சுழல் ஆண்டுகள் கடந்ததால் இப்பொழுது சூரியன் ஏப்ரல் – 21-ல் தான் மேச ராசியில் நுழைகிறான், 30 திகிரி சமநாளிலிருந்து நகர்ந்து விட்டதை காட்டுவதால், ஒரு மாதம் பருவங்கள் தப்புகின்றது. எனவே இந்த 2020 -ல் ஒரு மாதம் முன் தள்ளி மீண்டும் சமநாளின் (march – 20) அடுத்த நாளை சித்திரை – 1 (march – 21) ஆக்கி 1920 ஆண்டுகளுக்குப் பின் நம்முடைய தமிழ் நாட்காட்டியான சித்தரியல் (siderial) நாட்காட்டியை திருத்தி , சரி செய்ய வேண்டும். அதை கொடி மரத்தின் நிழலைக் கொண்டு சரி பார்த்து, கருவரையிலிருந்து கொடி மரத்தின் வழியாக இரவில் வான் பார்த்தால் கொடி மரத்தின் வடக்கில் முதல் ராசியாக மீனம் முழுதாக வந்து விட்டதையும் சரியார்த்து, திருத்தப்பட்ட சித்தரியல் நாட்காட்டி தயாரித்து வடிவமைத்து உள்ளோம்.
Related Posts