Sidhariyal

19 ஏப்ரல் – 8 . அக்னி வெயில் ஆரம்பித்தது (தமிழர்களின் விண்ணியல்)

Posted on ஜனவரி 30, 2026

இன்று சித்திரை – 19 ஏப்ரல் – 8 2024. அக்னி வெயில் ஆரம்பித்து இன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது. தென்னந் தோப்புக்குள் நடந்து சென்று தண்ணீர் பாய்க்கவே சிரமமாக உள்ளது. காலையில் பழையதும், மதியம், மோர் கலந்த கேப்பை கூழ், மோர்மிளகாய் என சாப்பிட்டால் தான் இதமாக இருக்கிறது. தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. இரவு மிதமான காற்று வீசுகிறது. இன்று அமாவாசை . சூரிய கிரகணம். வானம் தெளிவாக இருக்கிறது. அடுத்த பௌர்ணமியில் காற்று திரும்ப வேண்டும். வைகாசி பௌர்ணமி. கொண்டல் காற்றாகி, தென்கிழக்கு, தென்மேற்காக மாறும். பௌர்ணமி தாண்டி கோடை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு.
Related Posts