Sidhariyal

நிலா 12 மாதத்தில் 13 வட்டம் அடித்து விடுகிறது. (தமிழர்களின் விண்ணியல்)

Posted on ஜனவரி 29, 2026

நிலா 13 திகிரிகள் நகர்ந்தால் ஒரு திதி. இதுதான் அனைத்திற்கும் அடிப்படை அதுதான் திருக்குறளில் 13 இயல்பு களாக 13 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு திதிக்கு 13 திகிரி என்றால் 30 திதிக்கு ஒரு மாதம். அமவாசை + வளர்பிறை 14 + பௌர்ணமி + தேய்பிறை 14 = 30 திதிகள். 30 திதிகள் x 13 திகிரி = 390 திகிரி. அதாவது வானில் ஒரு 360 திகிரி வட்டம் முடித்து 30 திகிரி நகர்ந்து விடுகிறது , ஒரு மாதத்தில். ஒரு மாதத்திற்கு 30 திதிகள் என்றால் ஒரு ஆண்டுக்கு 12 x 30 = 360 திதிகள். 360 திதிகள் என்றால் கிட்டத்தட்ட 354 நாட்கள். திகிரி கணக்கில் பார்த்தால் ஒரு திதிக்கு 13 திகிரிகள் என்றால் 30 திதிக்கு 390 திகிரிகள். 12 மாதத்தில் 12 x 390 = 4680 திகிரிகள். ஒரு வட்டம் அடிக்க 360 திகிரியை 4680 ஆல் வகுத்தால் = 4680/360 = 13 வட்டம். அதாவது நிலா 12 மாதத்தில் 13 வட்டம் அடித்து விடுகிறது.
Related Posts